போக்குவரத்து விதிகளை பொதுமக்களுக்கு சொல்லித்தர போலீஸ் என்ன நம்மை காபி ஷாப் கூட்டிச் சென்றா விளக்குவார்கள் என நடிகர் கருணாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தரமணியில் நேற்று இளைஞர் ஒருவர், போலீஸ்காரர் தன்னையும் தனது குடும்பத்தாரையும் தரக்குறைவாக பேசி தாக்கியதாகக் கூறி தீக்குளித்தார்.
இச்சம்பவம் குறித்து நடிகர் கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சாலை பாதுகாப்பை ஏன் பின்பற்ற வேண்டும் என்பதை போலீஸ்காரர்கள் நம்மை காபி ஷாப்புக்கு கூட்டிச் சென்று விளக்கிவிட்டு புன்னகையுடன் பைபை சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இல்லாவிட்டால் தீக்குளிப்பு முடிவுக்குச் செல்கிறோம். தீக்குளித்தால் எல்லோரது ஆதரவும் கிடைக்கிறது சம்பந்தப்பட்ட போலீஸ்காரரும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
ஆனால், நாம் அனைவரும் சாமி சிங்கத்தையும், வேட்டையாடு விளையாடு போலீஸையும் ரசிக்கிறோம். சூப்பர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.