மாற்றுத் திறனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி, நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள். 
தமிழகம்

மகளிர் உரிமைத் தொகை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் @ நாமக்கல்

செய்திப்பிரிவு

நாமக்கல்: மாற்றுத் திறனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி, நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, மோகனூர் வட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், ‘அனைத்து மாற்றுத் திறனாளியின் குடும்ப தலைவிகளுக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்க வேண்டும். அதிக அளவில் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசு விலையில்லாமல் வழங்கிய பெட்ரோல் ஸ்கூட்டரை காரணம் காட்டி, கலைஞர் மகளிர் உதவித் தொகை மறுப்பதைக் கைவிட வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட அமைப்பாளர் முருகேசன், மோகனூர் வட்ட செயலாளர் பெருமாள், சேந்தமங்கலம் வட்ட பொறுப்பாளர் சேனாதிபதி, கொல்லிமலை வட்ட அமைப்பாளர் சந்திரசேகரன், ராசிபுரம் வட்ட பொறுப்பாளர் கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT