தமிழகம்

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடலில் விசாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே 510 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

எனவே, தொலை தூரத்தில் புயல் சின்னம் உருவாகி இருப்பதை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில், நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று மதியம் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோல, காரைக்காலில் உள்ள தனியார் துறை முகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது.

SCROLL FOR NEXT