விருதுநகர்: விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கூரைக் குண்டு கிராமத்துக்கு செல்லும் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால், மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சுமார் 1.5 கி.மீட்டர் தொலைவில் உள்ள கூரைக் குண்டு ஊராட்சிக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து வசதி இல்லாததால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனால், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் தான் பொது மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலை யிலிருந்து கூரைக் குண்டு செல்லும் வழியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினாலும், நீர் கசிவு ஏற்பட்டு மீண்டும் தண்ணீர் நிரம்பி விடுகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து கூரைக்குண்டு கிராம மக்கள் கூறியது: மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்துக்கு மிக அருகிலிருந்தும் எங்கள் கிராமத்துக்கு பேருந்து வசதி இல்லை. பல ஆண்டு களுக்கு முன் சிற்றுந்து இயக்கப் பட்டது. தற்போது அதுவும் இல்லை. இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவ, மாணவியர், வேலைக்குச் செல்வோர்,
பொதுமக்கள் சுமார் 1.5 கி.மீ. தொலைவிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து வந்து பேருந்துகளில் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.