கோப்புப் படம் 
தமிழகம்

அரசின் அனுமதியின்றி சிறப்பு காட்சி: திரையரங்கு உரிமையாளருக்கு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூரில் உள்ள பிரபல திரையரங்கில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சல்மான்கான் நடித்த‘டைகர் 3’ என்ற இந்தி திரைப்படத்துக்கு அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதாக ஆட்சியருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் மகேஸ்வரன் தலைமையில் விசாரணை மேற்கொள்ள ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், வருவாய் அலுவலர் தேவி உள்ளிட்டோர் தியேட்டரில் சோதனை மேற்கொண்டனர். இதில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டது தெரிய வந்தது இதுதொடர்பான அறிக்கையின் அடிப்படையில், தியேட்டர் உரிமையாளருக்கு ஆட்சியர் தரப்பில்நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் மீது திரையரங்கம் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் நட வடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சம்பந்தப்பட்ட திரையரங்கம் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்தின் மகன் செந்தில்குமாருக்கு சொந்தமானது என்பதுகுறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT