தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் பாஜகவினர் மற்ற கட்சியினருக்கு சளைத்தவர்கள் அல்ல என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் பாஜகவினர் மற்ற கட்சியினருக்கு சளைத்தவர்கள் அல்ல. 50 ஆண்டுகளாக தமிழ் என்ன வளர்ச்சி கண்டுள்ளது?" என்று கேள்வியெழுப்பினார்.
மேலும், "வைரமுத்து தனி மனிதரிடமோ அல்லது தனி அமைப்பிடமோ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று யாரும் வலியுறுத்தவில்லை. ஆண்டாளை தன் தாய்க்கு இணையாக வைத்து பார்ப்பதாக கூறும் வைரமுத்து தன் தாயிடம் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், சோடா பாட்டில் குறித்து ஜீயர் பேசியது நல்ல அர்த்தத்தில்தான் இருக்கும். அவர்களெல்லாம் ஆன்மிகப் பெரியோர். அவர்களுக்கு இதை பற்றியெல்லாம் தெரியாது" என்று கூறினார்.