தமிழகம்

திருமண்டங்குடியில் தீபாவளியன்று விவசாயிகள் கருப்பு கொடியேந்தி போராட்டம் நடத்த முடிவு

செய்திப்பிரிவு

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும், புதிய நிர்வாகம் வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், வங்கிகளில் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்து, சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். இந்த ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2022, நவ.30-ம் தேதி முதல் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

346-வது நாளான நேற்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்க உயர்மட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கலையரசன் தலைமையில், செயலாளர் சரபோஜி மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்தப் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், கரும்பு விவசாயிகளை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாகக் கூறி, தீபாவளி பண்டிகையான நவ.12-ம் தேதி காலை புத்தாடை அணியாமல், ஆலை முன்பு கருப்புக் கொடியேந்தி, கருப்பு தீபாவளியாகக் கொண்டாட உள்ளோம் என சங்கச் செயலாளர் சரபோஜி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT