தமிழகம்

அமைச்சருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுஆய்வு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

2006-11-ல் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் மதிப்பில் சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக 2012-ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தங்கம் தென்னரசு மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த வில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்தது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் பதிலளிக்கும்படி தங்கம் தென்னரசு, மணிமேகலை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், விசாரணையை நவ.28-க்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT