கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். மாற்றுத் திறனாளியான இவர் கிருஷ்ணசாமி நாயுடு நினைவு அறக்கட்டளை என்ற பெயரில் மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
கோவையில் இறந்தவர் வீடுகளுக்கு தானாகச் சென்று இலவசமாக அமரர் ஊர்தி சேவை ஏற்படுத்திக் கொடுப்பது, குளிர்சாதன பெட்டி, டேபிள், சேர், சாமியானா, கைகழுவப் பயன்படும் இயந்திரம் ஆகியவற்றை வழங்கி வருகிறார். மேலும், இறந்தவர்களை மின்மயானத்தில் பதிவு செய்து கொடுப்பது, இறுதிச் சடங்கு செய்ய அதற்கான ஆள்களை ஏற்படுகள் செய்து தருவது போன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக கோவை சவேரியர் அரிமா சங்கம் பாராட்டியது. கோவை வரதராஜபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவின்போது ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் நாற்காலிகளை செல்வராஜுக்கு சவேரியர் அரிமா சங்கம் வழங்கியது.
நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் புதிய தலைவராக மோகன்ராஜ், செயல் அலுவலராக உதயகுமார், செயலாளர் (பொ) மணிகண்டன், பொருளாளராக சண்முகசுந்தரம் மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.