சென்னை: தமிழ் வளர்த்த இத்தாலிய அறிஞர்வீரமாமுனிவர் பிறந்த நாளையொட்டி, தமிழக அரசின் சார்பில்,சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு அரசின்சார்பில், அமைச்சர்கள், அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:
திமுக அரசின் நிலைப்பாடு: ஆத்திகர்களும், நாத்திகர்களும்ஒன்று சேர்ந்த நாடுதான் இந்தியா. இதில் பெரியார் கொள்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவை. இந்து மதத்தையும் ஏற்றுக் கொள்கின்ற நிலையில்தான் திமுகஅரசு உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறையை கலைப்பதுதான் முதல் கையெழுத்தாக இருக்கும் என்று அண்ணாமலை கூறியிருக்கிறார். அது நடக்கப் போவது இல்லை. திமுகவின் வாக்கு வங்கி இன்று 20 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
தற்போது வரை தமிழகத்தில் சுமார் ரூ.5,500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட் டுள்ளன. ஒரு கால பூஜை திட்டத்துக்கு மட்டும் இதுவரை அரசின் சார்பில் ரூ.200 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.