புதை சாக்கடைகளில் காணப்படும் அடைப்புகளை உறிஞ்சி அகற்றும் அதி நவீன இயந்திரத்துடன் கூடிய ட்ரக். 
தமிழகம்

சாக்கடை அடைப்புகளை நீக்கும் ‘திமிங்கலம்’ - ரூ.3.5 கோடியில் வாங்க திருச்சி மாநகராட்சி திட்டம்

செய்திப்பிரிவு

திருச்சி: புதை சாக்கடை அடைப்புகளை நீக்குவதற்காக ரூ.3.5 கோடி மதிப்பிலான அதி நவீன இயந்திரத்துடன் கூடிய ட்ரக் வாகனத்தை வாங்கதிருச்சி மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திருச்சி மாநகராட்சியில், புதைசாக்கடை அடைப்புகளை நீக்குவதற்கான 13 ஜெட்ராடர் வாகனங்கள் ( பெரியது 8, சிறியது 5 ) உள்ளன. இவை புதை சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை லேசாக அகற்றி கழிவுநீர் குழாய் வழியே செல்வதற்கு ஓரளவுக்கு உதவி புரிகின்றன. இந்நிலையில், கழிவுநீர் மேலாண்மையில் புதை சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை முழுவதும் நீக்க,

மேம்படுத்தப்பட்ட ரீசைக்கிளர் எனும் அதி நவீன இயந்திரம் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த இயந்திரம் புதை சாக்கடையில் உள்ள குப்பை மற்றும் மண், கல் போன்ற அனைத்து திடக் கழிவுகளையும் மொத்தமாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு, தண்ணீரை மட்டும் மீண்டும் புதை சாக்கடையில் விட்டுவிடும்.

இதனால், புதை சாக்கடைகளில் அடைப்புகள் இல்லாமல் கழிவுநீர் எளிதாக செல்லும். முதலில், சோதனை அடிப்படையில் வாடகைக்கு இந்த வாகனத்தை மாநகராட்சி நிர்வாகம் வாங்கி பயன்படுத்தி வருகிறது. இதன் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக இருப்பதால், இந்த இயந்திரத்தை சொந்தமாக வாங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாநகர மேயர் மு.அன்பழகன் கூறியது: புதை சாக்கடை அடைப்பை நீக்க தனியாரிடமிருந்து நாளொன்றுக்கு 8 மணி நேரத்துக்கு ரூ.85,000 வாடகை கொடுத்து ரீசைக்கிளர் இயந்திரத்தை பயன்படுத்திப் பார்த்தோம். அதன் செயல்பாடு திருப்தியாக உள்ளதால், ரூ.3.5 கோடி மதிப்பிலான இந்த இயந்திரத்தை வாங்க முடிவு செய்துள்ளோம்.

புதை சாக்கடை மேலாண்மை என்பது எதிர்காலத்தில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு மிகவும் சவாலான பிரச்சினையாக இருக்கும். அதை சமாளிக்க இது போன்ற அதி நவீன இயந்திர வாகனங்கள் அவசியம் என்றார். கழிவுநீர் மேலாண்மை தொழில் நுட்ப வட்டாரத்தில் இந்த ரீ சைக்கிளர் என்ற மெகா இயந்திர வாகனத்தை ‘திமிங்கலம்’ என அழைக்கிறார்கள்.

புதை சாக்கடை அடைப்பை நீக்க தனியாரிடம் இருந்து நாளொன்றுக்கு 8 மணி நேரத்துக்கு ரூ.85,000 வாடகை கொடுத்து ரீ சைக்கிளர் இயந்திரத்தை பயன்படுத்திப் பார்த்தோம். அதன் செயல்பாடு திருப்தியாக உள்ளதால், ரூ.3.5 கோடி மதிப்பிலான இந்த இயந்திரத்தை வாங்க முடிவு செய்துள்ளோம்.

புதை சாக்கடை மேலாண்மை என்பது எதிர்காலத்தில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு மிகவும் சவாலான பிரச்சினையாக இருக்கும். அதை சமாளிக்க இது போன்ற அதி நவீன இயந்திர வாகனங்கள் அவசியம்" என்றார். கழிவுநீர் மேலாண்மை தொழில் நுட்ப வட்டாரத்தில் இந்த ரீ சைக்கிளர் என்ற மெகா இயந்திர வாகனத்தை ”திமிங்கலம்” என அழைக்கிறார்கள்.

SCROLL FOR NEXT