சென்னை: கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கடந்த ஆண்டைபோலவே அவர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. போனஸ் சட்டத்தின்கீழ் வராத தலைமைச் சங்கங்கள், மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2400-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகை யாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.