தமிழகம்

தீபாவளி | நெல்லைக்கு கூடுதல் ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில் இயக்கம்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு; வழக்கமான வந்தே பாரத் ரயில் நெல்லையில் இருந்து பயணத்தை தொடங்கி நெல்லையில் முடியும்.

ஆனால் இந்த சிறப்பு ரயில் சென்னை எழும்பூரில் பயணத்தை தொடங்கி எழும்பூரிலேயே பயணத்தை முடிக்கும். இதன் படி, நவம்பர் 9-ல் சென்னை - நெல்லை வந்தே பாரத் சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு நெல்லை வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் (06068) மாலை 3.00 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் வழக்கம் போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT