ராமநாதபுரம் புறநகர் பகுதியான சக்கரக்கோட்டை மகாசக்தி நகர் 9-வது தெருவில் சாலையை மூழ்கடித்த மழைநீர். 
தமிழகம்

ராமநாதபுரத்தில் 16 குடிசை வீடுகள் சேதம்; தொண்டியில் அதிகபட்சமாக 95.4 மி.மீ. மழை பதிவு

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக பட்சமாக தொண்டியில் 95.4 மி.மீ மழை பதிவானது. மழையால் மாவட்டத்தில் 16 குடிசை வீடுகள் சேதமடைந்தன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீ.ல்) அதிகபட்சமாக தொண்டியில்- 95.4, கடலாடி- 9, வாலி நோக்கம்- 62, கமுதி- 18.2, பள்ளமோர்குளம்- 3, முதுகுளத்தூர்- 25, பரமக்குடி- 48.2, ஆர்.எஸ்.மங்கலம்-46, ராமநாதபுரம்- 40.2, பாம்பன்- 1, ராமேசுவரம்- 1.3, தங்கச்சிமடம்- 4, தீர்த்தாண்டதானம்- 63.3, திருவாடானை- 73.4, வட்டாணம்- 56.4, மண்டபம்- 0.6.

ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. அதனால் நகரில் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் இதுவரை மழையால் 15 குடிசை வீடுகள் பகுதியாகவும், ஒரு வீடு முழுமை யாகவும் சேதமடைந்துள்ளன.

SCROLL FOR NEXT