தமிழகம்

தென்பெண்ணை ஆற்றில் துர்நாற்ற ரசாயன நீர் 3 அடி உயரத்துக்கு நுரையுடன் செல்வதால் ஓசூர் விவசாயிகள் வேதனை

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நீர் துற்நாற்றத்துடன் 3 அடி உயரத்துக்கு நுரை படர்ந்து செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு தமிழக எல்லை ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணை வழியாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று இறுதியில் கடலில் கலக்கிறது. இந்த அணையின் மொத்த கொள்ளவு 42.28 அடியாகவும், வலதுபுறம் 22.6 கிலோ மீட்டர் தொலைவும், இடது 32.5 கிலோ மீட்டர் தெலைவில் உள்ளது. இதன் பாசன பரப்பள்ளவு சுமார் 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் தென்பெண்ணை ஆற்றில் அங்குள்ள குடியிருப்பு கழிவு நீரும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரும் கலந்து கெலவரப்பள்ளி அணையில் தேங்குகிறது. பின்னர் அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடும் போது, துர்நாற்றத்துடன் நுரை பொங்கி வெளியேறுகிறது. இதனால் அருகே உள்ள விளைநிலங்களில் ரசாயன நுரை படர்ந்து விளைச்சல் பாதிக்கப்படுவதும், கால்நடைகள் இந்த தண்ணீர் குடிக்க முடியாத நிலையும், மேலும் இந்த தண்ணீரில் குளிக்கும் பொதுமக்களுக்கு தோல் சம்மந்தமாக நோய்களும் பரவி வருகிறது.

இதனால் கர்நாடக மாநிலத்திலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரை தடுக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த. 9 மாதங்களாக மதகுகள் சீரமைக்கும் பணிக்காக அணையிலிருந்து மொத்த தண்ணீரும் ஆற்று வழியாக வெளியேற்றப்பட்டது. மேலும் அணைக்கு வரும் மழை நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. தொழிற்சாலை கழிவுகளால் அணை தற்போது கழிவு நீர் தேங்கி குட்டை போல் உள்ளது.

தொடந்து கர்நாடக மாநில தொழிற்சாலையிருந்து ரசாயன நீர்திறக்கப்பட்டுள்ளதால் கடந்த சில தினங்களாக கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடும் தண்ணீர் கருப்பு நிறத்தில் சென்றது. தற்போது தென்பெண்ணை நீர்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், 200 கன அடியாக வந்துகொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 560 கன அடியாக உயர்ந்தது. இந்த தண்ணீர் அப்படியோ ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், மழைநீருடன் ரசாயன நீர் துற்நாற்றத்துடன் 3 அடி உயரத்துக்கு நுரை படந்து செல்கிறது. மேலும் இந்த நுரை காற்றில் பறந்து அருகே உள்ள விளைநிலத்தில் உள்ள விளைபயிர்கள்மீது படந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்

SCROLL FOR NEXT