சென்னை: அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர்கள் கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, சென்னையில் இன்று நடைபெறுகிறது. அகில இந்திய மாநில அரசுஓய்வூதியர்கள் கூட்டமைப்பின்முதல் தேசிய மாநாடு, சென்னை வேப்பேரியில் உள்ள மகாராஷ்டிர பவனில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. மாநாட்டை முன்னிட்டு நேற்று மாலை 6 முதல் 9 மணி வரை, தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இன்று நடைபெறும் மாநாட்டில், வழிகாட்டுதல் குழு, நிகழ்ச்சிநிரல் குழு, தீர்மானங்கள் குழு ஆகியவை உருவாக்கப்படுகின் றன. இம்மாநாட்டுக்கு கூட்டமைப்பின் தேசிய தலைவர் அசோக் தோல் தலைமையேற்கிறார். மாநாட்டுக்கு வருவோரை, சிஐடியு வரவேற்பு குழு தலைவர் அ.சவுந்தரராசன் வரவேற்கிறார். மாநாட்டை, கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஏ.ஸ்ரீகுமார் தொடங்கிவைத்து உரையாற்றுகிறார்.
இதில், முன்னாள் எம்.பி டி.கே.ரங்கராஜன், கூட்டமைப்பின் உதவி பொதுச்செயலாளர் எம்.அன்பரசு, மூத்த பொறியாளர்கள் சங்க தலைவர் ஏ.வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் 20-க்கும் மேற் பட்ட மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டின் இறுதியில், கூட்ட மைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் இந்த மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.