தமிழகம்

புதிய வாக்காளர்களை சேர்க்க மநீம அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா நேற்று விடுத்த அறிக்கை: தமிழகத்தில் 4 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவைகளுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளைச்செயலாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், அவரவர் வாக்குச்சாவடிக்குச் சென்று புதிய வாக்காளர்களை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT