கோப்புப்படம் 
தமிழகம்

மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று மழை விடுமுறை

செய்திப்பிரிவு

சென்னை: மதுரை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (சனிக்கிழமை, நவ.4) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரையில் நேற்று மாலை முதல் தொடர் மழை பொழிவு பதிவாகி இருந்தது.

மதுரை மாவட்டத்தின் நகரம் மற்றும் ஊரக பகுதியில் மழை தொடர்கிறது. ஆங்காங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மதுரையை ஒட்டிய திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மழை தொடர்ந்து வருகிறது. மழை நீர் தேங்காத வகையில் மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மதுரை, தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT