விசிறி தாத்தா சுந்தர ராஜமூர்த்தி 
தமிழகம்

மதுரையில் விசிறி தாத்தா காலமானார்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் உள்ள கோயில்களில் அர்ப்பணிப் போடு பக்தர்கள் மனம் குளிரும் வகையில் விசிறி வீசி ஆன்மிகச் சேவையாற்றிய ‘விசிறி தாத்தா’ சுந்தர ராஜ மூர்த்தி (87) வயது மூப்பால் காலமானார்.

மதுரை திருநகர் மாணிக்க நகரைச் சேர்ந்தவர் சோ.ரெ.சுந்தர ராஜமூர்த்தி. சீதாலெட்சுமி நூற்பாலை ஊழி யரான இவர், வேண்டுதல் காரணமாக கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில்களுக்குச் சென்று விசிறி வீசி வருகிறார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோவில் கள்ளழகர் கோயிலில் விழாக் காலங்களிலும், சித்திரை திருவிழாக்களின் போதும், பக்தர்கள் மனம் குளிர விசிறி வீசும் சேவையை தொடர்ந்து வந்தார். இந்நிலையில் முதுமை காரணமாக கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்த அவர் அக். 29-ம் தேதி காலமானார்.

இது குறித்து அவரது மகன் ஆனந்த் பாபு கூறுகையில், "கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில்களுக்கு சென்று விசிறி வீசி வந்தார். உடல் நிலை பாதித்ததால் கோயில்களுக்கு செல்ல முடியவில்லை என வருத்தத்தில் இருந்தார்." என்றார்.

SCROLL FOR NEXT