சென்னை: பரங்கிமலை யார்டில் பொறியியல் பணி காரணமாக, கடற்கரை - தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை (31-ம் தேதி) காலை 10.18, 10.24, 10.30, 10,36, 10.46, முற்பகல் 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, நண்பகல் 12.00, 12.10, 12.30, 12.50, மதியம் 1.15, 1.30, 2.00, பிற்பகல் 2.45 ஆகிய நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே, நாளை காலை 10.56, முற்பகல் 11.40, நண்பகல் 12.20, 12.40, மதியம் 1.45, பிற்பகல் 2.15, 2.30 ஆகிய நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
அதேபோல, தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே நாளை காலை 9.08, 9.50, 10.30, 10.40, 11.00, முற்பகல் 11.10, 11.30, 11.40, நண்பகல் 12.05, 12.35, மதியம் 1.00, 1.30, 1.40, 2.05, பிற்பகல் 2.20, 2.50, 2.57, 3.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு நாளை காலை 11.00, முற்பகல் 11.30, நண்பகல் 12.00, மதியம் 1.00, 1.45, பிற்பகல் 2.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே நாளை காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருமால்பூர் - சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்பட உள்ளன.
ரத்து செய்யப்படும் ரயில்களுக்கு பதிலாக, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.