தமிழகம்

1,500 புத்தகங்களை சிறை நூலகங்களுக்கு வழங்கிய முதல்வர்

செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்திக்க வருபவர்கள் அளித்த புத்தகங்களில் 1,500 புத்தகங்களை தமிழகத்திலுள்ள சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

இதன்படி, சிறை நூலகங்களில், புத்தகங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும், சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்கு இப்புத்தகங்கள் பேருதவியாக அமையும் என்பதை கருத்தில்கொண்டும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு வழங்கப்பட்ட 1,500 புத்தகங்களை தலைமைச் செயலகத்தில் சிறைத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

இதில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, உள்துறை செயலாளர் பெ.அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT