அமைச்சர் எஸ்.ரகுபதி 
தமிழகம்

ரவுடி 'கருக்கா' வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக பிரமுகர்: அமைச்சர் ரகுபதி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. இவரை ஏற்கெனவே சிறையில் இருந்து ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் பாஜகவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கெனவே பாஜக அலுவலகம் முன்பு இதேபோல தாக்குதல் நடத்திய கருக்கா வினோத்தை பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்து இருப்பது வேறொரு சந்தேகத்தையும் கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழக காவல்துறை தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது.

SCROLL FOR NEXT