ரத்தத்தில் கையெழுத்திட்டு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள். 
தமிழகம்

தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்குமாறு ரத்தத்தில் கையெழுத்திட்டு ஆர்.பி.உதயகுமார் அழைப்பு

செய்திப்பிரிவு

மதுரை: பசும் பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு பொதுமக்களையும், அதிமுக தொண்டர்களையும் அழைக்கும் வகையில் அழைப்பிதழ்களை முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் ரத்தத்தில் கையெழுத்திட்டு வழங்கினர்.

அதன்பின் ஆர்பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு பசும் பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி நேரில் வந்து மாலை அணி வித்து மரியாதை செலுத்த அழைக்கிறோம். மதுரை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ரத்தக் கையெழுத்திட்டு அழைப்பு விடுக்கும் விதமாக இந்த ரத்தக் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளோம், என்றார்.

SCROLL FOR NEXT