மதுரை ஏ.வி. மேம்பாலத்தில் இஸ்ரேல், இந்திய தேசிய கொடியை பறக்கவிட முயன்ற இளைஞர்கள். 
தமிழகம்

மதுரை ஏ.வி. மேம்பாலத்தில் இஸ்ரேல், இந்திய தேசிய கொடியை பறக்கவிட முயற்சி - 3 பேரிடம் விசாரணை

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை கோரிப்பாளையம் ஏ.வி. மேம்பாலத்தில் நேற்று பிற்பகல் இளைஞர்கள் 3 பேர் இஸ்ரேல் மற்றும் இந்திய தேசியக் கொடிகளுடன் அதில், `இந்தியா இஸ்ரேலுடன் இருக்கிறது' ( India Stand with Israel ) என்ற ஆங்கில வாசகத்துடன் கூடிய பேனரை பாலத்தில் பறக்கவிட முயன்று முழக்கம் எழுப்பினர்.

அப்போது, அவர்கள் பாரத் மாதா கி ஜே, ஜெய் ஸ்ரீராம், இந்தியா இந்து நாடு என்றும் முழக்கங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் 3 பேரையும் மதிச்சியம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

முன்னதாக அவர்கள் கூறுகையில், ‘இந்திய பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாலஸ் தீனத்துக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டங்களும் கொடிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டி இதனைப் பறக்க விட்டோம்,” என்றனர்.

SCROLL FOR NEXT