ஓசூர்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, ஓசூரிலிருந்து சென்னைக்கு காந்திய வாதி நடைபயணம் தொடங்கினார். அகில இந்திய காந்திய பேரியக்கத்தின் தேசியச் செயலாளர் காந்திய வாதி கருப்பையா (45).
மதுரையைச் சேர்ந்த இவர் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, டெல்லி மகாத்மா மிஷன் பவுண்டேஷன், அகில இந்திய காந்திய இயக்கம், பெங்களூரு ஜனநாயக விழிப்புணர்வு இயக்கம் ஆகியவை சார்பில் ஓசூரிலிருந்து சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னம் வரை 400 கிமீ தூரம் நடைபயணம் மேற்கொள்கிறார்.
இதையடுத்து, ஓசூரிலிருந்து நேற்று முன்தினம் நடைபயணத்தை தொடங்கினார். தினசரி 30 கிமீ நடை பயணம் மேற்கொள்ளும் கருப்பையா, சர்சிவி ராமன் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி சென்னை போர் நினைவுச் சின்னத்தில் நடைபயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.