திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று இரவு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் இன்று நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று இரவு வருகை வந்த அவருக்கு, மாவட்ட திமுக சார்பில் கீழ்பென்னாத்தூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் முதல்வரை வரவேற்றனர்.
அப்போது சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, திமுக மருத்துவரணி மாநிலத் துணை தலைவர் கம்பன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரவணன், கிரி, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.