புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை (அக்.21) நடைபெற இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஊடகங்களுக்கு அளித்துள்ள தகவலில், “புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கனவு விருப்பமான, இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியை, புதுச்சேரியில் நடத்த ஏற்பாடு செய்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்தோம்.
சில தவிர்க்க முடியாத காரணங்களால், புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சிக்கும் மாபெரும் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு தடையாக அமைந்துள்ள சில வழக்குகளாலும் இந்த இசை நிகழ்ச்சியை குறித்த தேதியில் நடத்த முடியாமல் போனதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.