துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள் ளிட்ட பதவிகளில் 79 காலி இடங் களை நிரப்புவதற்காக, குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 1 மணிக்கு முடிந்தது.
இதில், பொது அறிவு பகுதியில் இருந்து 150 வினாக்களும், திறனறிவு பகுதியில் 50 கேள்விகளும் கேட்கப் பட்டன. தேர்வெழுத ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் அனுமதிக்கப் பட்டிருந்தனர். ஆனால், 50 சதவீதம் பேர் தேர்வெழுத வரவில்லை. தமிழகம் முழுவதும் 570 தேர்வு மையங்களில் ஏறத்தாழ 70 ஆயிரம் பேர் தேர்வெழுதினர்.
சென்னையில் 108 இடங்களில், 17ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுதினர். திருவல்லிக்கேணி சிஎஸ்ஐ கெல்லட் மேல்நிலைப் பள்ளி, மயிலாப்பூர் சிறுவர் தோட்ட மேல்நிலைப் பள்ளி தேர்வு மையங் களை டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப் பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். முதல்நிலைத் தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ (உத்தேச விடை) 10 நாளில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரி ஷோபனா தெரிவித்தார். அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் (ஒரு காலியிடத்துக்கு 50 பேர்) அனுமதிக்கப்படுவார்கள்.