கோப்புப் படம் 
தமிழகம்

பெங்களூருவில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் நுரையீரல்கள்: சென்னை கொண்டு வந்து பெண்ணுக்கு பொருத்தம்

செய்திப்பிரிவு

சென்னை: பெங்களூருவில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் நுரையீரல்கள் சாலை வழியாக 4 மணி நேரத்தில் சென்னை கொண்டு வரப்பட்டு பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டன.

பெங்களூருவில் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த 30 வயது இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க, அவரின் உறவினர்கள் முன்வந்தனர். நுரையீரல்களை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 55 வயது பெண்ணுக்கு பொருத்தமுடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் விமான சேவைகள் இல்லாததால், சாலை வழியாக உறுப்புகளை கொண்டுவர மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று இளைஞரின் நுரையீரல்களை பாதுகாப்பாக அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் எடுத்தனர். பின்னர் ஒசூர், கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக இரு மாநில போக்குவரத்து போலீஸாரின் உதவியுடன் பசுமைவழித் தடம் (கிரீன் காரிடார்) அமைக்கப்பட்டு 4 மணி நேரத்தில் நுரையீரல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

எம்ஜிஎம்மருத்துவமனையில் மருத்துவர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அந்த பெண்ணுக்கு நுரையீரலை வெற்றிகரமாக பொருத்தி மறுவாழ்வு அளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT