தமிழகம்

“நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டேவா?” - திமுக மீது வேலுமணி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கோவை: அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி எம்எல்ஏ, கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

அதிமுகவின் ‘ஏக்நாத் ஷிண்டே’ என்று சமூகவலை தளங்களில் என்னை விமர்சிப்பது குறித்து கேட்கிறீர்கள். இந்தப்பிரச்சினையை யார் கிளப்புகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

குறிப்பாக, திமுக ‘ஐடி விங்’ இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த யார் முயற்சித்தாலும், எதுவும் நடக்காது.

நாங்கள் பாஜகவுடன்இைணவோம் என்று திமுகவினர் உள்ளிட்ட சிலர் கூறி வருகிறார்கள். ஆனால், கட்சியின் நிலைப்பாட்டை பொதுச் செயலாளர் பழனிசாமி தெளிவாக அறிவித்துவிட்டார். இவ்வாறு வேலுமணி கூறினார்.

SCROLL FOR NEXT