இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவமுறை கவுன் சில், இந்திய ஹோமியோபதி கவுன் சில்களுக்கு 2013 நவம்பர் மாதம் முதல் நடைபெற்ற உறுப்பினர் நிய மனத்தை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடவும், அதுவரை உறுப் பினர்கள் செயல்படுவதற்கு தடை விதிக்கக் கோரியும் தாக் கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில ளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.
தஞ்சாவூரைச் சேர்ந்த பி.முரளி தரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவமுறை கவுன்சில், இந்திய ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடக்கின்றன. இந்த கவுன்சில்களுக்கு கடந்த 2013-ல் 23 பேர், 2014 பிப்.28-ல் 5 பேர், ஏப்.3-ல் 14 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்கள் மருத்துவக் கல்வி மற்றும் நிர்வாகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் அதி காரம் கொண்டவர்கள். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களை மத்திய அரசு நியமனம் செய்கி றது. நிபுணத்துவம் மற்றும் திறமை யானவர்கள் என்று கூறி தங்க ளுக்கு வேண்டியவர்களை உறுப்பி னர்களாக மத்திய அரசு நியமித்து வருகிறது. இந்திய மருத்துவமுறை கவுன்சில் உறுப்பினராக வனிதா முரளிகுமார் என்பவர் நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய அண்மையில் உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.
இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவமுறை கவுன்சில், இந்திய ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினர்களாக சம்பந்தப்பட்ட துறைகளில் புலமை பெற்றவர்கள், நியாயமானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். 2013 நவ.5 முதல் 42 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது நியமனம் முறையாக நடைபெறவில்லை. எனவே, 2013 நவ.5 முதல் இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய மருத்துவ முறை கவுன்சில், இந்திய ஹோமி யோபதி கவுன்சில் உறுப்பினர் நியமனங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை அந்த உறுப்பினர்கள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க மத்திய ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், சித்தா மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) துறை செயலர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர், இந்திய மருத்துவ முறை கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய ஹோமியோபதி கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.