சென்னை: செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கரோனா காலத்தில் பணியாற்றி இருந்தால், ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுதும் காலியாகஉள்ள 2,250 கிராம சுகாதார செவிலியர், துணை செவிலியர்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு https://www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையவழியாக பெறப்படும் விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்படும் என்று மருத்துவபணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கரோனாகாலத்தில் பணியாற்றியவர் களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள், ‘கரோனா கேர்’ மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும். கரோனா காலத்தில் 6-12 மாதம்பணியாற்றி இருந்தால் 2 மதிப்பெண், 12-18 மாத பணிக்கு 3 மதிப்பெண், 18-24 மாதத்துக்கு 4 மதிப்பெண், 24 மாதங்களுக்கு மேல் பணியாற்றி இருந்தால் 5 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.