தமிழகம்

தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுவது பொய்: அண்ணாமலை குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்துக்கு மத்திய அரசுநிதி ஒதுக்கவில்லை என்றுஅமைச்சர் தங்கம் தென்னரசு பொய் கூறுகிறார் என அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று அன்றைய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து பொய் கூறிவந்தார். அதே பாணியில், தற்போது சட்டசபையில் பொய் கூறுகிறார் தற்போதைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

2014 முதல் 2022 வரை மத்திய அரசின் நேரடி வரி வருவாயில், தமிழகத்தின் பங்கு ரூ.5.16 லட்சம் கோடி என்றும், மத்திய அரசு வழங்கிய வரிப் பங்கீடு ரூ.2.08 லட்சம் கோடி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில், கடந்த 9 ஆண்டுகளில், மத்திய அரசு வழங்கிய வரிப் பங்கீடு ரூ.2.46 லட்சம் கோடி ஆகும். அதனுடன், கடந்த 9 ஆண்டுகளில், மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய உதவித் தொகை, ரூ.2.30 லட்சம் கோடி.

தமிழகத்தில் இருந்து கிடைத்ததாக அமைச்சர் கூறும்ரூ.5.16 லட்சம் கோடி வரி வருவாயில், நேரடி நிதியாகவே கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிதி ரூ.4.77 லட்சம் கோடிஆகும். அமைச்சர் கூறும் ரூ.2.08 லட்சம் கோடி கணக்கை எப்படிக் கணக்கிட்டார் என்பதை வெளிப்படையாகக்கூற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் உண்ணாவிரதம்: இதற்கிடையே காவிரி விவகாரம் தொடர்பாக கும்பகோணத்தில் பாஜக சார்பில்உண்ணாவிரதப் போராட்டம்நடைபெறும் என அண்ணா மலை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகவுடன்கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. அந்த அரசுதான் காவிரியில் தண்ணீர்திறந்து விடாமல் வஞ்சிக்கிறது.

ஆனால், கூட்டணி கட்சி என்ற ஒரே காரணத்துக்காக, அதை திமுக கண்டிக்காமல், அந்த கட்சி பற்றி எதுவும் பேசாமல் மத்திய அரசை குறை கூறுவது ஆளும் கட்சியின் திறமையின்மையைக் காட்டுகிறது.

எனவே, திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் கும்பகோணத்தில் வரும் 16-ம் தேதி மாநிலபொதுச் செயலாளர் கருப்புமுருகானந்தம் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT