தென்காசி: நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், லியோ பட இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு சிக்கல்களால் இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தென்காசியில் பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், ‘முன்பு எல்லாம் பட ரிலீஸ்க்கு தான் தடை. இப்ப பாட்டுக்கும், பேச்சுக்குமா தடை?.
2026- மொத்தமா தரப்போறாரு தரமான விடை’ என்று வாசகம் இடம் பெற்றுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.