நாகர்கோவில்: ஆழ்கடலில் மீன்பிடித்தபோது எல்லை தாண்டிய 32 மீனவர்களை இங்கிலாந்து நாட்டு கடற்படையினர் சிறைபிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 15-ம் தேதிசின்னத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சைமன் பாஸ்டின்என்பவரது இரு விசைப்படகுகளில் சின்னத்துறை, தூத்தூர், ரவிபுத்தன் துறையைச் சேர்ந்த 28 பேர், நாகை மாவட்டம் மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த தலா இருவர் என மொத்தம் 32 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் கடந்த 27-ம் தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாகக் கூறி, இங்கிலாந்து நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான டீகோ கார்சியா தீவுக்கு கொண்டுசென்று, அங்கு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்கக் கோரி, அவர்களின் குடும்பத்தினர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் மனு அளித்தனர்.