தமிழகம்

மின் இணைப்பு துண்டிப்பால் புதுச்சேரி அரசு அலுவலகத்தில் இருட்டில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மின் இணைப்பு துண்டிப்பால் புதுச்சேரி அரசு அலுவலகத்தில் இருட்டில் வேலைவாய்ப்பு முகாம் நடந்துள்ளது.

புதுவை அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் காந்திநகர் வேலைவாய்ப்பு மையத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்.6)காலை தொடங்கியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு புதிதாக பட்டம் படித்தவர்கள், 10 மற்றும் 12 வகுப்பு முடித்தவர்கள், டிப்ளமோ ஐடி மற்றும் பட்டப் படிப்பு முடித்தவர்கள், முதுகலை படித்தவர்கள் வந்திருந்தனர். புதுவை, தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றன.

காலை 9 மணி முதல் காந்தி நகர் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கூடியிருந்தனர். காலை 10 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இருட்டில் முகாமில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை இளைஞர்களுக்கு ஏற்பட்டது. இளைஞர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக நேர்காணல் நடத்துவர்கள் செல்போன் வெளிச்சம், சிறிய எமர்ஜென்சி விளக்கை வைத்து நேர்காணலை நடத்தினர். அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என அறிக்கப்பட்டும், மின் துணைப்பு துண்டிக்கப்பட்டதை வந்திருந்தோ இளைஞர்கள் வேதனையுடன் விமர்சித்தனர்.

SCROLL FOR NEXT