தமிழகம்

தேனி - போடி இடையே ரயிலை 100 கிமீ வேகத்தில் இயக்க அனுமதி

செய்திப்பிரிவு

போடி: மதுரையில் இருந்து போடி வரை அகலப் பாதை பணிகள் முடிவடைந்து தேனிக்கு 2022 மே 26-ல் இருந்தும், போடிக்கு 2023 ஜூன் 15-ம் தேதியில் இருந்தும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழித் தடத்தில் மதுரைக்குப் பயணிகள் தினசரி ரயிலும், சென்னைக்கு வாரம் மூன்று நாட்களுக்கு விரைவு ரயிலும் சென்று வருகின்றன. இதில் அதிகபட்ச வேகமாக மதுரையில் இருந்து தேனி வரை 100 கிலோ மீட்டரும் தேனியில் இருந்து போடிக்கு 90 கிமீ. வேகமும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

தற்போது தேனி - போடி இடையே நூறு கி.மீட்டராக வேகத்தை உயர்த்தி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், புதிதாக அமைக்கப்பட்ட வழித் தடத்தில் தண்டவாளத்தின் அதிர்வுத் தன்மை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும். இதைத் தொடர்ந்து வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

துரை ராஜபுரம் காலனி பகுதியில் உள்ள பாலம் மற்றும் அருகில் உள்ள வளைவுப் பகுதிகளில் மட்டும் அதிகபட்சம் 90 கிமீ வேகத்தில் ரயிலை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றனர்.

SCROLL FOR NEXT