தமிழகம்

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டி: விஷாலுக்கு கேஜ்ரிவால் வரவேற்பு

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள நடிகர் விஷாலுக்கு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசியலுக்கு வருகை தந்துள்ள உங்களை நான் வரவேற்கிறேன். அரசியலில் உங்கள் வருகை நிறைய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும். நீங்கள் டெல்லிக்கு அடுத்து வரும்போது நாம் சந்திப்போம்" எனக் கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் தன்னைக் கவர்ந்த தலைவர்கள் என நடிகர் விஷால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் விஷால் அரசியலுக்கு வந்துள்ளதை அர்விந்த் கேஜ்ரிவால் வரவேற்றுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால், சனிக்கிழமை இரவு அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு, தமிழக அரசியலிலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஷால் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஷால் இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

SCROLL FOR NEXT