அமைச்சர் ஐ.பெரியசாமி | கோப்புப் படம் 
தமிழகம்

என்னை சந்திக்க மருத்துவமனைக்கு வர வேண்டாம்: அமைச்சர் ஐ.பெரியசாமி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் ஐ.பெரியசாமி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். நான் நலமுடன் இருக்கிறேன்.

டெங்கு மற்றும் நோய் தொற்று பரவாமல் இருக்க என்னை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவுடன் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன் என அந்த அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT