தமிழகம்

கலை, அறிவியல் கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் ஒரு மாத காலத்திற்குள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதிப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மாநில உயர் கல்வி அமைச்சர் பழனியப்பன், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT