முன்னாள் மேயர் சிவராஜ் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தங்கசாலை, மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
தமிழகம்

முன்னாள் மேயர் சிவராஜின் பிறந்தநாள்: அரசு சார்பில் மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் மேயர் சிவராஜின் படத்துக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை மாநகரின் முன்னாள் மேயர் ந.சிவராஜின் 132-வது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி வடசென்னை தங்கசாலை, மணிக்கூண்டு அருகே அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து விசிக சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர்கள் ஏ.சி.பாவரசு,உஞ்சை அரசன், மாவட்டச் செயலாளர் சவுந்தர் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செய்தனர்.

SCROLL FOR NEXT