சென்னை: அனைவருக்கும் பயன்படும்வகையிலான பல்வேறு செயல்பாடுகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணையம் வழியாக தொடர்ந்து முன்னெடுத்து நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நிவேதாகலை, கைவினைக் கழகத்துடன் இணைந்து களிமண் பொம்மைகள் செய்தல் மற்றும் மினியேச்சர் ஆர்ட் குறித்த ஆன்லைன் பயிலரங்கு அக்.7, 8 (சனி, ஞாயிறு) ஆகிய 2 நாட்கள் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
இந்த ஆன்லைன் பயிலரங்கில் 8 வகையான வித்தியாசமான கிரியேட்டிவ் கிராஃப்ட் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/claydoll என்ற லிங்க் மூலம், 2நாட்களுக்கும் சேர்த்து ரூ.350/-(ஜிஎஸ்டி வரிகள் தனி) பதிவுக்கட்டணம் செலுத்தி, பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.அருகே உள்ள கியூஆர் கோடு மூலமாகவும் பதிவுசெய்து கொள்ள லாம்.