சென்னை: சென்னை தி.நகர் பாண்டிபஜார் நாயர் சாலையில் நேற்று காலை சுமார் 10 அடி ஆழத்துக்கு திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதைக்கண்ட அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்து, அந்த சாலையில் போக்குவரத்தை தடை செய்து, அந்த வழியாக சென்ற வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். கழிவுநீர் கால்வாய் பணிகள் காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், இதுபோன்று ஏற்கெனவே ஒருமுறை இதே சாலையில் பள்ளம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது சரி செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.