தமிழகம்

அதிமுக - பாஜக பிரிவு சரி செய்யப்படும்: புதிய தமிழகம் கட்சித் தலைவர் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் சில தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வார்த்தை போர் நடைபெற்றதால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியுள்ளது.

இந்த பிரச்சினைக்கு அண்ணாமலை மட்டுமே காரணம் இல்லை. சிறிய விரிசல் பெரியதாகிவிட்டது. இதில் சரிசெய்ய முடியாத நிலை இல்லை. கூட்டணி தர்மத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். கூட்டணியில் இருந்து கொண்டு அதில் இருப்பவர்களை விமர்சிப்பது கூடாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக இருந்தால் தமிழகம், புதுச்சேரியில் 40-க்கு 40 இடங்களை வெல்ல முடியும். இத்தகைய சூழலில் அதிமுக – பாஜக இடையே பிரிவு ஏற்பட்டிருக்கக்கூடாது.

இந்த பிரிவு கூட்டணியில் உள்ளஅனைத்து கட்சிகளையும் ஏதாவதுஒரு விதத்தில் பாதிக்கத்தான் செய்யும். 2 கட்சிகளின் தலைமையிடம் மவுனம் நீடிப்பதால், பிரிவு சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். ஒருவேளை பிரிவு சரி செய்யப்படாவிட்டால் அந்த நேரத்தில் புதிய தமிழகம் கட்சி உரிய முடிவு எடுக்கும் என்றார்.

SCROLL FOR NEXT