எம்.எஸ்.சுவாமிநாதன் | கோப்புப் படம் 
தமிழகம்

புகழஞ்சலி - எம்.எஸ்.சுவாமிநாதன் | “இந்தியா அரிசி ஏற்றுமதி நாடாக முக்கியக் காரணமானவர்” - அன்புமணி

செய்திப்பிரிவு

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவு, இந்தியாவுக்கு பேரிழப்பு என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ''பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் வேளாண் ஆராய்ச்சியாளர் எம்.எஸ். சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார் என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உணவுக்காக வெளிநாடுகளில் இருந்து உணவு தானிய இறக்குமதியை நம்பியிருந்த இந்தியா‌ இன்று உலகில் உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் நாடாக வளர்ந்திருப்பதற்கு மிக முக்கியக் காரணம், எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையேற்று நடத்திய பசுமை புரட்சிதான்.

பல்வேறு ஆராய்ச்சி அமைப்புகளுக்கு தலைமையை ஏற்று இந்தியாவின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் , வேளாண் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT