சென்னை: விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாகஇயக்குநர் கே.இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று (செப்.28) முதல் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பயணிகளிடம் இருந்து பெறக்கூடாது என நடத்துநர்களுக்கு அனைத்து கிளை மேலாளர்களும் அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மீறி நடத்துநர்கள் யாரேனும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பயணிகளிடம் இருந்து பெற்றால், சம்பந்தப்பட்ட நடத்துநர்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.