தமிழகம்

மன்மோகன் சிங் பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து

செய்திப்பிரிவு

முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்றும் நினைவுகூரப்படுவார் என்று பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உலகளாவிய நிதி நெருக்கடியின்போது, பிரதமராக அவரது தலைமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு இந்தியாவின் எதிர்காலத்தை மறு வடிவமைத்தது. அவரது ஆர்ப்பாட்டமில்லாத அறிவார்ந்த மற்றும் பணிவான அணுகுமுறை எக்காலத்துக்கும் தலைமைத்துவத்துக்கு மதிப்புமிக்க படிப்பினைகளை வழங்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என்றும் அவர் நினைவுகூரப்படுவார். இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT