தமிழகம்

ஜெயலலிதாவை சசிகலா ஏதோ செய்துவிட்டார் என்று அரசியல் செய்தவர்கள் இதனை வரவேற்க வேண்டும்: புகழேந்தி

செய்திப்பிரிவு

ஜெயலலிதாவை சசிகலா ஏதோ செய்துவிட்டார் என்று அரசியல் செய்தவர்கள் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வரவேற்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் இன்று (புதன்கிழமை) வெளியிட்டார். 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி பழச்சாறு அருந்துவது போல் காட்சிகள் உள்ளன.

இதுகுறித்து டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், "ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்படும் என்று மே 3-ம் தேதியே கூறியிருந்தேன். ஜெயலலிதாவை சசிகலா ஏதோ செய்துவிட்டார் என்று அரசியல் செய்தவர்கள் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வரவேற்க வேண்டும்.

அமைச்சர்கள் ஆலோசனை, ஜெயலலிதா பிசியோதெரபி சிகிச்சை பெற்ற வீடியோவும் உள்ளன. தேவைப்பட்டால் அவை விரைவில் வெளியிடப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT