தமிழகம்

மீனவர்களுக்கு ஆதரவாக வலுக்கும் குரல்கள்: மாயமானவர்களை மீட்கக்கோரி கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெ.மனோகரன்

புயலில் மாயமான கன்னியாகுமரி மீனவர்களுக்கு மீட்கக்கோரி குமரியை அடுத்து சென்னையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கோயம்புத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை, கலைக் கல்லூரி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி, மீனவ கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டோர் குளச்சல் சந்திப்பு மற்றும் மணவாளக்குறிச்சி ஆகிய இரண்டு இடங்களில் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும் என்றுகோரி, சென்னையில் மீனவ குடும்பத்தினர் 2,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கோயம்புத்தூரைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒக்கி புயலால் காணாமல்போன சுமார் 1,500 மீனவர்களை மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை கோவை பார் கவுன்சில் தலைவர் கே.எம்.தண்டபாணி தலைமை வகித்தார்.

SCROLL FOR NEXT