சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாது நபியை முன்னிட்டு செப்.28-ம் தேதி மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ம் தேதி ஆகிய நாட்களில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளும் மூடப்பட வேண்டும்.
மேலும், டாஸ்மாக் கடைகளைச் சேர்ந்த பார்கள், எப்எல்2உரிமம் கொண்ட கிளப்புகளை சேர்ந்த பார்கள், எப்எல்3 உரிமம்கொண்ட ஹோட்டல் பார்கள், எப்எல் 3 ஏ, ஏஏ மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இரு தினங்களும்மதுபானம் விற்கக் கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகள்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.